அந்தியூர் நாளை நடைபெற இருந்த மாட்டுச்சந்தை ரத்து
நாளை முழு ஊரடங்கையொட்டி , அந்தியூரில் நாளை நடைபெற இருந்த மாட்டுச்சந்தை ரத்து.
ஈரோடு மாவட்டத்தில் அந்தியூரில் புகழ்பெற்ற வாரச்சந்தை ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும். இதில் ஞாயிற்றுக்கிழமை மாட்டுச்சந்தை நடைபெறும். இங்கு மாடுகளை வாங்குவதற்கு ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி சேலம், தர்மபுரி, கரூர் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள்.
இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கும், நாளை (ஜன.9) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து அந்தியூரில் நாளை நடைபெற இருந்த மாட்டுச்சந்தை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திங்கட்கிழமை நடைபெறும் காய்கறி மளிகை பொருட்கள் சந்தை வழக்கம்போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.