பவானியில் 100 நாள் பணியாளர்களுக்கு புற்றுநோய் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம்..!
பவானி அடுத்த மைலம்பாடி பகுதியில் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு புற்றுநோய் மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது.
பவானி அடுத்த மைலம்பாடி பகுதியில் 100 நாள் வேலை திட்டப் பணியாளர்களுக்கு புற்றுநோய் மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை (இன்று) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் ஜம்பை வட்டார மைலம்பாடி ஆரம்ப சுகாதார நிலையப் பகுதிக்கு உட்பட்ட எரப்ப நாயக்கன்பாளையம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கு புற்றுநோய் மற்றும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்ட நோக்கம் மற்றும் பயன்கள், புற்றுநோய் வகைகள் அதன் பாதிப்புகள், புற்றுநோய்க்கான காரணிகள், புற்று நோய்க்கான பரிசோதனை கிடைக்கும் இடங்கள், பரிசோதனையின் அவசியம், புகையிலை பயன்பாடுகளினால் ஏற்படும் உடல் பாதிப்புகள், புகையிலை தடுப்புச் சட்டங்கள்,டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், காய்ச்சல் கண்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியதின் அவசியம், மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பு வழிமுறைகள், மக்களை தேடி மருத்துவம் திட்ட நோக்கம் மற்றும் பயன்பாடுகள், உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறுவதின் அவசியம், சரிவிகித சமச்சீர் உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சியின் அவசியம் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலக மாவட்ட நலக் கல்வியாளர் சிவகுமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராமசாமி, சுகாதார ஆய்வாளர்கள், 100 நாள் வேலை திட்டப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.