பண்ணாரி மாரியம்மன் கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.98 லட்சம்..!

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.97.77 லட்சம் வசூல் ஆகியுள்ளது.

Update: 2024-02-02 12:00 GMT

உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்.

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.97.77 லட்சம் வசூல் ஆகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே புகழ்பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் அனைத்து நாட்களிலும் இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்படும். செவ்வாய், வெள்ளி, அமாவாசை, பவுர்ணமி, பொது விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட வெளி மாநில பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும்.

இந்தநிலையில் கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக கோவில் வளாகத்தில் மொத்தம் 19 இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் மாதம் ஒருமுறை உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டு வருகின்றன. இம்மாதத்திற்கான உண்டியல்கள் எண்ணும் பணி பண்ணாரி கோவில் துணை ஆணையர் மேனகா தலைமையில் நடைபெற்றது. இதில் ரொக்கம் ரூ.97,77,982, தங்கம் 366 கிராம், வெள்ளி 798 கிராம் இருந்தது.

இதில் பவானி சங்கமேஸ்வரர் கோவில் உதவி ஆணையர்/ செயல் அலுவலர் சுவாமிநாதன், சத்தி இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் சிவமணி, கண்காணிப்பாளர் பாலசுந்தரி, கோவில் அறங்காவலர்கள், பல்வேறு சேவை அமைப்பினர், கல்லூரி மாணவிகள், கோவில் மற்றும் வங்கி பணியாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News