சந்திர கிரகணத்தை முன்னிட்டு, நாளை பண்ணாரி அம்மன் கோவில் நடை அடைப்பு
சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) பண்ணாரி கோவில் நடை அடைக்கப்படுகிறது.;
சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) பண்ணாரி கோவில் நடை அடைக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் நடை தினமும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு மேல் அடைக்கப்படும்.
ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடக மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு தினமும் வந்து அம்மனை தரிசனம் செய்து செல்வார்கள். இதனால் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் தினமும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) பவுர்ணமி அன்று சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இதனால், நாளை கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பின்னர், மாலை 6 மணிக்கு நடை சாத்தப்படும். ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் காலை 6 மணிக்கு நடை திறக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.