ஈரோட்டில் சாலையோரத்தில் கட்டை பையில் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தை
ஈரோட்டில் சாலையோரத்தில் கட்டை பையில் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தையை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
Erode Today News, Erode Live Updates - ஈரோட்டில் சாலையோரத்தில் கட்டை பையில் தொப்புள் கொடியுடன் கிடந்த குழந்தையை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு சென்னிமலை சாலையில் ரங்கம்பாளையம் செல்லும் வழியில் தனியார் மண்டபம் அருகே சாலையோரம் கட்டைப் பை ஒன்று கிடந்தது. அந்த பையில் குழந்தை அழும் குரல் கேட்டுள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் பையை திறந்து பார்த்தனர்.
அதில், தொப்புள் கொடியுடன் பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை இருப்பதைக் கண்டனர். பின்னர், இதுகுறித்து ஈரோடு தாலுக்கா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டனர்.
தொடர்ந்து, ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது, குழந்தை அங்கு சிகிச்சை பெற்று வருகிறது. இதனையடுத்து, சம்பவ இடத்திலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் , குழந்தையை கட்டைப் பையில் வீசிச் சென்றது யார் என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.