அந்தியூர் அருகே கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம்
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம், ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பகுதியில் சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மைக்கேல்பாளையம் ஊராட்சி பொய்யேரிக்கரை கிராமத்தில் அந்தியூர் வட்டார அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட இலவச சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை (நேற்று) நடைபெற்றது.
முகாமிற்கு, வட்டார மருத்துவ அலுவலர் சக்திகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மைக்கேல்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் வரவேற்றார். முகாமினை, அந்தியூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், மாநில மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினருமான ஏ.ஜி.வெங்கடாசலம் தலைமை வகித்து, முகாமை ரிப்பன் வெட்டியும், குத்து விளக்கேற்றியும் துவக்கி வைத்தார்.
முகாமில், சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். மேலும், முகாமில் கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கும் ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்களையும் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாசலம் வழங்கினார்.
இம்முகாமில், எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சதீஸ்குமார், சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குருசாமி, செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி நேர செவிலியர்கள், கிராம செவிலியர்கள் மற்றும் மருத்துவ துறை சார்ந்த பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.