நிறுவன மேம்பாட்டு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஈரோடு ஆட்சியர் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் மையத்தில் காலியாக உள்ள நிறுவன மேம்பாட்டு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.;
ஈரோடு மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் தொழில் மையத்தில் காலியாக உள்ள நிறுவன மேம்பாட்டு அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது, பவானி, பவானிசாகர், சென்னிமலை, சத்தியமங்கலம் மற்றும் தாளவாடி ஆகிய 5 வட்டாரங்களில் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மதி சிறகுகள் தொழில் மையத்தில் தற்போது ஒப்பந்த அடிப்படையில் ஒரு நிறுவன மேம்பாட்டு அலுவலர் (ஈடிஓ) பணியிடம் காலியாக உள்ளது. இப்பணியிடத்திற்கு மாத சம்பளம் ரூ.25 ஆயிரம் மற்றும் பயணப் படி வழங்கப்படும்.
மேற்கண்ட, காலி பணியிடத்திற்கு ஏதேனும் முதுகலை பட்டம் மற்றும் கணிணி திறன் பெற்றுள்ள 40 வயதுக்குட்பட்ட ஊரக தொழில் வாய்ப்புகளில் பொது மற்றும் நிதி நடவடிக்கை சார்ந்த திறன் பெற்றுள்ள விண்ணப்பத்தாரர்கள் தங்களது சுயவிபரத்தினை erd.tnrtp@yahoo.com என்ற மின்னஞ்சலிலோ அல்லது தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட செயல் அலுவலர், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், நம்பர்- 5, பாரதிதாசன் தெரு, டீச்சர்ஸ் காலனி, ஈரோடு 638001 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ வரும் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.