தக்காளி ஒரு கிலே ரூ. 150 : அந்தியூர் வாரச்சந்தையில் விலை உச்சம்!

அந்தியூர் வாரச்சந்தையில் தக்காளி கிலோ ரூ.150-க்கு விற்பனை ஆனது.

Update: 2021-11-23 02:15 GMT

ஈரோடு மாவட்டத்தில் காய்கறிகள் விலை அதிகரித்துள்ளது. அந்தியூரில் கூடிய வாரச்சந்தையில் தக்காளி கிலோ ஒன்று ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனை ஆனது. இதனால் இல்லத்தரசிகள் கலக்கம் அடைந்தனர். எனினும் சமையலுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பதால் பெண்கள் குறைந்த அளவு தக்காளியை வாங்கி சென்றனர்.

இதுதவிர அந்தியூர் வாரச்சந்தையில் கத்தரிக்காய் ரூ.120 முதல் ரூ.140 வரையும், சிறிய வெங்காயம் கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரையும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.50 ரூ..60 வரையும் விற்கப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, 'தற்போது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் காய்கறி செடிகள் நீரில் மூழ்கி சேதம் அடைந்து விட்டன. இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. அதனால் கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக விலைக்கு காய்கறிகள் விற்பனை ஆனது' என்றனர்.

Tags:    

Similar News