வெண்ணந்தூரில் வளைவுப் பகுதியில் வேகத்தடை கோரிக்கை

விபத்து ஆபத்து அதிகரிக்கின்றது, வெண்ணந்தூர் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை தேவை, மக்கள் கோரிக்கை;

Update: 2025-03-29 07:00 GMT

விபத்தை தடுக்க வேகத்தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை

வெண்ணந்தூர் ஆர்.புதுப்பாளையம் பகுதியில், ராசிபுரத்தில் இருந்து குட்டலாடம்பட்டி வழியாக சேலம் செல்லும் சாலையில் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. மல்லூர், பனமரத்துப்பட்டி வழியாக சேலம் செல்வது எளிதாக இருப்பதால் இச்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகம் பயணிக்கின்றனர். இச்சாலையில் வளைவு பகுதிகள் அதிகம் உள்ளன. குறிப்பாக, காளியம்மன் கோவில் பகுதியில் உள்ள சாலை வளைவில் அவ்வப்போது சிறுசிறு விபத்துகள் ஏற்படுகின்றன. அங்கு பெரிய விபத்துகள் நடக்காமல் தவிர்க்க, வளைவு பகுதியில் வேகத்தடை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News