அந்தியூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்

அந்தியூர் தவிட்டுப்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில் நடந்த சிறப்பு குறைதீர் முகாமில் 317 மனுக்கள் பெறப்பட்டன

Update: 2022-07-20 15:30 GMT

அந்தியூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட மக்கள் தீர்க்கும் முகாமில் 317 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு மாவட்டம் முழுவதும் அந்தந்த தாலுகா உள் வட்டத்தில் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக அந்தியூர் உள் வட்டத்திற்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் தவிட்டுப் பாளையம் சௌடேஸ்வரி அம்மன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அந்தியூர் வட்டாட்சியர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், அந்தியூர் கெட்டிசமுத்திரம் எண்ணமங்கலம் மைக்கேல்பாளையம் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் 317 விண்ணப்பங்கள் வழங்கினர்.இதில் நில வருவாய் ஆய்வாளர் சுதாகர், வட்டார கல்வி அலுவலர் முருகன், அந்தியூர் வன அலுவலர் சக்திவேல், கிராம நிர்வாக அலுவலர்கள் முருகானந்தம் சதீஷ்குமார் யசோதா தேவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த முகாமில் வருமானம் சாதி இருப்பிடம் பிறப்பு உள்ளிட்ட பல்வேறு சான்றுகளுக்கும், குடும்ப அட்டை மற்றும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி கோருதல் உள்ளிட்ட பல்வேறு அரசு சலுகைகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

Tags:    

Similar News