அந்தியூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின்சார சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்துவதை கண்டித்து, அந்தியூர் துணை மின் நிலையத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-08-08 16:30 GMT

மின்சார சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து அந்தியூரில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வரும் மின்சார சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு மின்சார வாரிய அனைத்து தொழிற்சங்கம் சார்பில் அழைப்பு விடுத்தது.

இதனை அடுத்து இன்று காலை கோபி மின் பகிர்மான வட்டம் பவானி கோட்டம் அந்தியூர் துணை மின் நிலையம் முன்பு மின்சார வாரிய ஊழியர் சம்மேளன  மாநில துணை தலைவர் மற்றும் திட்ட செயலாளர் மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கொண்டு வரும் மின்சார மசோதாவை தாக்கல் செய்யலாம் கைவிட கோரிக்கை வைத்தார்.

இந்த கூட்டத்தில் சம்மேளனம் சார்பில் சிவக்குமார், இஞ்சினியர் சங்கம் சார்பில் அருளானந்தன், இஞ்சினியர் அசோசியேஷன் சார்பில் திருமூர்த்தி, ஐஎன்டியூசி (சேவியர்) , அம்பேத்கர் யூனியன் சார்பில் ராசந்திரன் ஐக்கிய சங்கம் சார்பில் பாச்சியப்பன், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News