சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக குருசாமி பதவியேற்பு

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக குருசாமி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.;

Update: 2021-10-20 10:00 GMT

சங்கராபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்ட குருசாமி.

நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒன்றியம் சங்கராபாளையம் திமுகவைச் சேர்ந்த குருசாமி வெற்றி பெற்றார். சங்கராபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக குருசாமி சங்கராபாளையம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பதவியேற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.பதவி ஏற்பு விழாவில் அந்தியூர் தொகுதி திமுக எம்எல்ஏ ஏ.ஜி வெங்கடாசலம் தலைமையில் தேர்தல் அலுவலர்களால் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட குருசாமிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் அந்தியூர் தொகுதி திமுக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்

Tags:    

Similar News