அம்மாபேட்டை பகுதியில் மகனை கத்தியால் தாக்கிய தந்தை கைது
அந்தியூர் அம்மாபேட்டை பகுதியில் மகனை கத்தியால் தாக்கிய தந்தை கைது செய்யப்பட்டார்.;
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட செல்லிகவுண்டனூர் பகுதியை சேர்ந்த மகேஷ் இவர் பெருந்துறையில் உள்ள கர்மேன்ஸ் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது தந்தை துரைசாமிக்கும் இவருக்கும் தகராறு ஏற்படவே மதுபோதையில் இருந்த தந்தை கத்தியால் மகேஷின் கை , கால்களில் குத்தியுள்ளார். இவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதலுதவி சிகிச்சை பெற்று கொண்டு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார். மேலும் மகன் மகேஷ் அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தை துரைசாமியை கைது செய்தனர்.