பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்கு

பள்ளிபாளையத்தில் பேக்கரியில் புகுந்து பொருட்களை உடைத்து நாசம் செய்து, கொலை மிரட்டல் விடுத்த 3 பேர் மீது வழக்குபதிவு.;

Update: 2021-10-26 08:15 GMT

சேதமடைந்த பேக்கரி.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பள்ளியபாளையம் பிரிவு என்ற இடத்தில் பள்ளிபாளையத்தைச் சேர்ந்த முகமது என்பவர் பேக்கரி நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியைச் சேர்ந்த காசி முருகன் மற்றும் சண்முகம் ஆகியோர், பேக்கரிக்கு சென்று பொருட்களை பெற்று கொண்டு பணத்தை நாளை தருகிறேன் என கூறியதாக தெரிகிறது. ஆனால் முகமது இப்போதே பணத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியதால், வாய்த்தகராறு ஏற்பட்டது. இதையடுத்து தகாத வார்த்தையால் திட்டிய மூன்று பேரும் பேக்கரியில் புகுந்து நாற்காலி மற்றும் உள்ளே இருந்த பொருட்களை உடைத்தனர். மேலும் முகமதுவை கையால் தாக்கிய மூன்று பேரும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் முகமது கொடுத்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News