அந்தியூரில் கர்நாடகா மாநில மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேர் கைது

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கர்நாடகா மாநில மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-18 11:30 GMT

கைது செய்யப்பட்ட 4 பேரை படத்தில் காணலாம்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் - பர்கூர் சாலையில் கிருஷ்ணாபுரம் ஏரிக்கரையில் அந்தியூர் போலீசார் இன்று (மார்ச்.18) சனிக்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வந்த இருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

இதில் அவர்களிடம் 19 கர்நாடக மாநில மதுபாட்டில்கள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதனை தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த பிரபு (26),  பள்ளிபாளையம் தெற்குபாளையத்தை சேர்ந்த சந்துரு (22) ஆகியோர் என்பதும், வெளிமாவட்டத்தில் இருந்து மது பாட்டில்களை வாங்கி வந்து இங்கு அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 19 கர்நாடக மாநில மது பாட்டில்கள் மற்றும் இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 

இதேபோல் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் இருந்து போலீசார் 24 கர்நாடக மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் லட்சுமி நகரை சேர்ந்த முகமது முஸ்தபா (வயது 23) , பள்ளிபாளையம் வெடியரசம்பாளையம் பகுதியை சேர்ந்த கார்த்தி (32) என்பதும், இவர்கள் 2 பேரும் கர்நாடக மாநிலம் மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக 2 பேரையும் அந்தியூர் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும், அந்தியூர் பகுதியில் நடைபெற்ற வாகன சோதனையில் இன்று (சனிக்கிழமை) ஒரே நாளில் 43 கர்நாடக மாநில மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News