ஈரோட்டில் தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற 13 ஆயிரத்து 645 பேருக்கு ரூ.10.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.;
ஈரோடு மாவட்டத்தில் தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவு பெற்ற 13 ஆயிரத்து 645 பேருக்கு ரூ.10.25 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆணையர் அலுவலகத்தில் கடந்த 2008ம் ஆண்டு முதல் நடப்பாண்டு அதாவது கடந்த 15ம் தேதி வரை தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் 39,369 தொழிலாளர்களும், உடலுழைப்பு அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 67,366 தொழிலாளர்களும், அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 6,089 தொழிலாளர்களும் என மொத்தம் 1லட்சத்து 12 ஆயிரத்து 824 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
தொழிலாளர் நலத் துறையில் பதிவு செய்து உள்ள உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 2,748 தொழிலாளர்களும், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்களில் 4,770 தொழிலாளர்களும் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரியத்தில் 334 தொழிலாளர்களும் மொத்தம் 7,852 தொழிலாளர்கள் மாதம் ரூ.1200 வீதம் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 5 நபர்கள் குடும்ப ஓய்வூதியமாக மாதம் ரூ.500 வீதம் பெற்று வருகின்றனர்.
பதிவு பெற்ற அமைப்புசாரா தொழிலாளர்களின் குழந்தைகள் படிப்பிற்கான கல்வி உதவித் தொகையாக 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் கல்விக்கும், 10,11,12ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளின் கல்விக்கும், 10,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளின் கல்விக்கும், மருத்துவம், வேளாண்மை, கால்நடை மருத்துவம் மற்றும் பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவ,மாணவிகளுக்கும், படித்த படிப்பிற்கு ஏற்றாற்போல் ரூ.1,000 முதல் ரூ.8,000 வரையிலும் வழங்கப்பட்டு வருகிறது.
மகப்பேறு உதவித்தொகையாக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் தொழிலாளர்களுக்கு ரூ.18,000ம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு ரூ.6,000ம், திருமண உதவித் தொகையாக கட்டு மான தொழிலாளர்களுக்கு ரூ.20,000ம் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு ரூ.3,000ம்(ஆண்) மற்றும் ரூ.5,000ம்(பெண்), கண் கண்ணாடிக்கான உதவித்தொகையாக கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் நலவாரிய தொழிலாளர் களுக்கு ரூ.750ம், விபத்து மரண நிவாரண நிதி உதவி தொகையாக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் தொழிலாளர்களுக்கு ரூ.2 லட்சமும் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு ரூ.1.25 லட்சமும் வழங்கப்பட்டு வருகிறது.
பணியிடத்தில் விபத்து மரணமடைந்த கட்டுமான தொழிலாளர்களின் (பதிவு பெற்ற மற்றும் பதிவுபெறாத) குடும்பங்களுக்கு ரூ.5 லட்சமும், விபத்தில் ஊனம் ஏற்பட்ட தொழிலாளர்களுக்கு உதவி தொகையாக ரூ. 1 லட்சம் வரையும் (ஊனத்தின் தன்மைகேற்ப) இயற்கை மரணமடைந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி உதவிதொகையாக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா ஓட்டுநர்கள் தொழிலாளர்களுக்கு ரூ.55 ஆயிரமும் மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு ரூ.35 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகின்றது.
ஈரோடு மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் அதாவது கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் கடந்த 15ம் தேதி வரை 11,644 தொழிலாளர்களின் 1 குழந்தைகளின் கல்விக்கான உதவித்தொகையாக ரூ.3 கோடியே 1 லட்சத்து 17 ஆயிரத்து 974ம், 178 தொழிலாளர்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.22 லட்சத்து 5 ஆயினும், 13 தொழிலாளர்கள் மகப்பேறுக்கான உதவித்தொகையாக ரூ.77 ஆயிரமும், 20 தொழிலாளர்களுக்கு கண் கண்ணாடிக்கான உதவி தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.
இயற்கை மரணமடைந்த 192 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு (ஈமச்சடங்கு உதவித்தொகை உட்பட) நிவாரண தொகையாக ரூ.78 லட்சத்து 43 ஆயிரமும், விபத்தில் மரணமடைந்த 1தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரமும், கட்டுமான பணியிடத்து விபத்தில் மரணமடைந்த 9 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.45 லட்சமும், 60 வயது நிறைவடைந்த 1,585 தொழிலாளர்களுக்கு புதிதாக மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதியம் என ரூ.5 கோடியே 75 லட்சத்து 25 ஆயிரத்து 112ம் வழங்கப்பட்டு வருகிறது.
, 2 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.500 வீதம் ஏற்கனவே பெற்று வரும் நபர்களையும் சேர்த்து குடும்ப ஓய்வூதியமாக மொத்தம் ரூ.15,500 மற்றும் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு சொந்த மாக ஆட்டோ வாகனம் வாங்குவதற்கு மானியமாக 1 பெண் ஓட்டுநர் பயனாளிக்கு மானிய தொகையாக ரூ.1 லட்சம் என மொத்தம் 13,645 பதிவு பெற்ற அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.10 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரத்து 586 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ள கேட்பு மனுக்களுக்கான விண்ணப்பங்களும் பரிசீலிக் கப்பட்டு உதவித்தொகைகள் வழங்கிட நடவடிக்கை எடுக் கப்பட்டு வருகிறது.
எனவே,பதிவு பெற்ற அனைத்து தொழிலாளர் கள், நியமனதாரர்களுக்கு தொழிலாளர் துறை கட்டு மானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் கல்வி. திருமணம். மகப்பேறு, ஓய்வூதியம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை www.tnwwwb.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.
மேலும் நலத்திட்டங்கள் தொடர்பான விவரங் களுக்கு ஈரோடு சென்னிமலை சாலை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் பின்புறம் உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலக கட்டிட வளாகத்தில் கீழ் தளத்தில் இயங்கி வரும் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் நேரிலோ அல்லது 0424-2275591, 2275592 ஆகிய தொலைபேசி எண் கள் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ, அலுவலக lossserode@gmail.com என்ற இமெயில் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.