பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளி மண்டை உடைப்பு: பட்டதாரி இளைஞர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி அருகே தொழிலாளியின் மண்டை உடைத்ததாக பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானூரைச் சேர்ந்தவர் ஞானவேல், வயது 31, டிரைவர், இவர் கடந்த 11 ந்தேதி இரவு அப்பகுதியில் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனையறிந்த அதே பகுதியை சேர்ந்த சக்தி வயது 31.என்பவர் தகராறை தடுத்துள்ளார். நீ யார் கேட்பது என்று கூறி சக்தியை ஞானவேலும் அவரது உறவினரான ராம் குமார்,வயது 23.பி.இ.பட்டதாரியும் சேர்ந்து சராமாரியாக தாக்கினர்.
இதில் மண்டை உடைந்த சக்தி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சக்தி கொடுத்த புகாரின் பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.