இளைஞர் கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை: தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பு
இளைஞர் கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனைவழங்கி தர்மபுரி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பெரிய மஞ்சவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன். அவரது மனைவி அனிதா(36). அதே பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் ( 22) அனிதாவிற்க்கும் அஜித்குமாருக்கும் கள்ள காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதை அறிந்த கணவர் மற்றும் உறவினர்கள் அறிவுரை வழங்கியதில் அஜித் குமார் ஓசூரில் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது ஊருக்கு வந்த அஜித் குமார் அனிதாவின் வீட்டிற்குச் சென்று உல்லாசத்திற்கு அழைத்துள்ளார்.
அதற்கு அனிதா மறுப்பு தெரிவித்துள்ளார். மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்யவே கிரைண்டர் கல்லை எடுத்து அனிதா அஜித்குமார் தாக்கியதில் அஜித்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை தொடர்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இறுதி கட்ட விசாரணை முடிவடைந்து அனிதா கொலை செய்தது உறுதியானதை அடுத்து நீதிபதி மோனிகா, அனிதாவிற்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.