தொப்பூர் கணவாயில் லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர் காயம்
தர்மபுரி-சேலம் நெடுஞ்சாலையில் உள்ள தொப்பூர் கணவாய் பகுதியில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.;
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் மோகன் வயது 34. லாரி டிரைவர், இவர் நேற்று பெங்களூரிலிருந்து லாரியில் டைல்ஸ் கல் ஏற்றிக்கொண்டு கோவைக்கு சென்று கொண்டிருந்தார். லாரி தர்மபுரி -சேலம் நெடுஞ்சாலையில் தொப்பூர் கணவாய் பகுதியில் நள்ளிரவு ஒரு மணி அளவில் செல்லும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோகன் படுகாயமடைந்தார். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் போலீசார் டிரைவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.