தர்மபுரி அருகே வடமாநில இளைஞர் கொலை: போலீசார் விசாரணை

தர்மபுரி அருகே வடமாநில இளைஞர் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-03-08 06:15 GMT

பாபாய்.

தர்மபுரியை அடுத்துள்ள குண்டல்பட்டி அருகேயுள்ள மாரவாடி சாலையில் மேற்குவங்காள மாநிலத்தை சேர்ந்த பாபாய் (வயது20), ஆதித்யா சவுத்ரி (40) ஆகியோர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் அருகில் உள்ள கிரானைட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ஆதித்யாசவுத்ரி சம்மட்டியை எடுத்து பாபாயை தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த மதிகோன்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது கொலை செய்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த பாபாய் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவான ஆதித்யா சவுத்ரியை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News