பாப்பிரெட்டிப்பட்டி அருகே தடையை மீறி திறந்த ஜவுளிக்கடைகளுக்கு அபராதம்
பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கொரோனா ஊரடங்கை மீறி திறந்ந்திருந்த ஜவுளி கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.;
தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகள் உள்ளன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. தர்மபுரி, அரூர் மெயின்ரோட்டில் இருபதுக்கும் மேற்பட்ட ஜவுளிக்கடைகள் உள்ளன.
தமிழக அரசு அண்மையில், புதிய தளர்வுகளுடன் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. எனினும், இதில் ஜவுளிக்கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இதை மீறி, பேரூராட்சி பகுதியில் நான்கு ஜவுளிக்கடைகள் திறந்திருந்தன. இதனை அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் போலீசார், தடையை மீறி திறந்திருந்த ஜவுளிக்கடைகளை மூடி, அதன் உரிமையாளர்களுக்கு அவர்களுக்கு ரூபாய் 8000 அபராதம் விதித்தனர்.