பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு: 3 பேர் மீது வழக்குப்பதிவு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறு தொடர்பாக, 3 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.;

Update: 2021-09-17 01:30 GMT

கோப்பு படம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த கோம்பூரைச் சேர்ந்தவர் அண்ணாமலை.80.விவசாயி. அப்பகுதியில் அவருக்கு சொந்தமான விவசாய நிலம் சம்பந்தமாக,  அதே பகுதியை சேர்ந்த வெங்கடாசலத்திற்க்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது .

இந்த நிலையில், வெங்கடாசலம், அவரது மகன்கள் மாதேஷ், மாது ஆகிய மூவரும் சேர்ந்து,  அண்ணாமலையை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, அண்ணாமலை தரப்பினரின் புகாரை தொடர்ந்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News