தர்மபுரி அருகே முறை தவறிய காதல், வாலிபர் போக்சோவில் கைது
தர்மபுரி அருகே முறை தவறிய காதலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.;
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது 18 வயது மகள் . பத்தாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இவரது பெரியப்பா ரகு மகன் சூரிய மணிகண்டன், வயது 19. டிரைவர். இருவரும் கடந்த 30, ந்தேதி மதியம் சூப்பர் எக்ஸெல் பைக்கில் பேக்கரிகடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து பெற்றோர் கொடுத்த புகாரின்படி பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்ததாகவும், முறையற்ற காதலால் , வீட்டை விட்டு வெளியேறியது தெரியவந்தது.
இதனையடுத்து சூரிய மணிகண்டனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். அப்பெண்ணை காப்பகத்திற்கு அனுப்பினர்.