சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது : போலீசார் விசாரணை

சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-03-03 08:28 GMT

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த, பத்தாம் வகுப்பு மாணவிக்கும், கடத்தூர் பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு இளம் வயது திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் அந்த மாணவி கர்ப்பம் தரித்தார். கடந்த சனிக்கிழமை நள்ளிரவு வயிற்றுவலி எடுக்கவே அவரை கடத்தூர் அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்தனர். அவருக்கு அங்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது‌ இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் கொடுத்த தகவலின் பேரில் வருவாய்த் துறையினரும் கடத்தூர் போலீசாரும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் அம்மாணவி தன் கைக்குழந்தையுடன் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு அவருடைய சொந்த கிராமத்திற்குச் சென்றார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News