பாப்பிரெட்டிப்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் மது வாங்க அலைமோதும் குடிமகன்கள்

பாப்பிரெட்டிப்பட்டி பகுதி டாஸ்மாக் கடைகளில் மது வாங்குவதற்காக குடிமகன்கள் முண்டி அடித்து வருகின்றனர்.;

Update: 2021-06-17 08:45 GMT

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் வாங்க அலைமோதும் குடிமகன்கள்.

தமிழகத்தில் 27 மாவட்டங்களுக்கு தளர்வுகள் வழங்கி,  மதுபான கடைகளை திறக்க தமிழக அரசுஅனுமதி வழங்கியுள்ளது.  அதன்படி தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையானூர், அலமேலுபுரம், பையர்நத்தம், கொப்பகரை,பொம்மிடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள 11 டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. 

இதில் பொம்மி டி கொப்பக்கரை டாஸ்மாக் கடைகளில் அதிகளவு குடிமகன்கள் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர் . சேலம் மாவட்ட எல்லை பகுதியில் அமைந்துள்ளதால், இந்த கடைகளுக்கு சேலம், ஈரோடு, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும்  ஏராளமான மது பிரியர்கள் வருகிறார்கள்.  பொம்மிடி கொப்பகரை ஆகிய டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்து வந்து மூட்டை மூட்டையாக மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர்.  மேலும் காலை 8 மணியில் இருந்தே அவர்கள் வரிசையில் நின்று மது வாங்குவதற்காக காத்து நிற்கின்றனர்.  இது கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து வருகிறது. இன்று மூன்றாவது நாளாகவும் குடிமகன்கள் அதிக அளவு இரு சக்கர வாகனங்களிலும் கார்களிலும் வந்த வண்ணம் உள்ளனர். கொரோனோ ஊரடங்கு விதிமுறைகள் போலீசார் கண்டு கொள்ளாத காரணத்தால் மதுப் பிரியர்கள் மகிழ்ச்சியோடு செல்கின்றனர்.

Tags:    

Similar News