பொம்மிடி அருகே தம்பதி கொலை: 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது
பொம்மிடி அருகே தம்பதியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடியை அடுத்த பில்பருத்தியை சேர்ந்தவர் விவசாயி கிருஷ்ணன் (80). இவரது மனைவி சுலோக்சனா (75) ஓய்வுப் பெற்ற ஆசிரியை. இருவரும் தங்களது விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
இந்நிலையில், கணவன், மனைவி இருவரையும் மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்திருப்பது, கடந்த 13 ந்தேதி தெரிவந்தது. இந்த சம்பவம் அறிந்த சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, தர்மபுரி மாவட்ட எஸ்.பி. சி.கலைச்செல்வன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து டிஎஸ்பிக்கள் அண்ணாதுரை, ராஜா சோமசுந்தரம் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன்,அம்மாதுரை, சிவசங்கரன்,கலைவாணி, நவாஸ் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தீவிர விசாரணையில் மூன்று பேர் கைது செய்யபட்டனர்.
தர்மபுரி மாவட்ட எஸ் பி.கலைசெல்வன் கூறியதாவது: பில்பருத்தி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் பிரகாஷ்ராஜ்,19. முகேஷ்,19. இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் ஹரீஸ் மூன்று பேரும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, வயதான தம்பதியரை கொலை செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து தங்கநகை கம்மல் 4 பேங்க் பாஸ்புக், ஏடிஎம் கார்டு ,3 மொபைல் போன்,கொலை செய்ய பயன் படுத்தப்பட்ட கத்தி, 18 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தொடர்புள்ள தலைமறைவாக உள்ள வேலவன், சந்துரு, எழிலரசன் ஆகியோரை தேடி வருவதாக தெரிவித்தார்.