தடுப்பூசி சாதனை: சுகாதார அலுவலர்களுக்கு பா.ஜ.க-வினர் பாராட்டு

கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனை எட்டப்பட்டதை அடுத்து, டாக்டர்களுக்கு பாஜகவினர் பாராட்டு தெரிவித்தனர்.;

Update: 2021-10-27 03:30 GMT

பாஜக நிர்வாகி பாஸ்கர் உள்ளிட்டோர், கடத்தூர் அரசு மருத்துவமனை டாக்டர்களை பாராட்டினர்.

தர்மபுரி மாவட்டம்,  கடத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட 42 கிராமங்களில், மத்திய அரசின் அறிவுரையின்படி நூறு சதவீதம் கொரோனோ தடுப்பூசி,  புளியம்பட்டி பஞ்சாயத்தில் போடப்பட்டுள்ளது. இதை போன்றே 42 கிராமங்களிலும் தடுப்பூசி போட வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு தலைமையிலான மருத்துவக்குழுவினர் கடுமையாக போராடி ஒவ்வொரு கிராமத்திலும் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.

இதில், இந்திய அளவில் நூறு கோடிப்பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளதை கொண்டாடும் வகையில், முன்னாள் எம்.எல்.ஏ.வும்,  மாநில பா.ஜ.க நிர்வாகியுமான  பாஸ்கர்,  கடத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்த டாக்டர்,  செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்தனர். இதில்,  டாக்டர் அரசு உள்ளிட்ட மருத்துவத்துறை ஊழியர்கள் பா.ஜ.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News