கடத்தூரில் செல்போன் டவரில், சென்னை லாரி டிரைவர் தற்கொலை முயற்சி

சென்னையை சேர்ந்தவர் கடத்தூரில் செல்போன் டவரில் ஏறி லாரி டிரைவர் தற்கொலை முயற்சி;

Update: 2021-07-30 14:00 GMT

தற்கொலை முயற்சி மேற்கொண்ட சென்னையை சேர்ந்த துரைராஜ்.

சென்னை, பல்லாவரம் காமராஜர்புரம் பாத்திமா நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் துரைராஜ்  (வயது 36. )லாரி டிரைவர். இவர் சில தினங்களுக்கு முன், சென்னையில் லாரி ஓட்டி விபத்து ஏற்படுத்தியதில் இவரின் ஓட்டுநர் உரிமத்தை விருகம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து, சென்னையிலிருந்து இன்று தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பொம்மிடியில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார். கடத்தூர் வந்ததும் அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். 

இதனையடுத்து, கடத்தூர் போலீசார் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வமணி தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்தனர். அப்போது, சென்னை போலீசார் ஓட்டுநர் உரிமம் பெற இதுவரை ரூ. 20 ஆயிரம் கொடுத்துள்ளதாகவும், மேலும் ஐந்தாயிரம் கேட்டு தொல்லை செய்வதாக கூறினார்.

பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அவர் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News