கடத்தூர் ஸ்ரீ ஐயப்பா ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் 19 பேர் கண்தானம்
கடத்தூர் ஸ்ரீ ஐயப்பா ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்கள் 19 பேர் கண்தானம்;
கடத்தூர் ஸ்ரீஐயப்பா ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் தர்மபுரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் சார்பில் கண்தான இருவார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி சேர்மன் சதாசிவம் தலைமை தாங்கினார். தர்மபுரி மருத்துவக்கல்லூரி கண் மருத்துவ பிரிவு மருத்துவர் சீனிவாசன் கலந்துகொண்டு மாணவர்களிடையே கண்தானம் குறித்து விளக்கிப் பேசினார்.
கல்லூரியில்படிக்கும் 19 மாணவர்கள் கண் தானம் மற்றும் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி நிர்வாகிகள் அன்பு, கண் மருத்துவ உதவியாளர் நாகபானு, சுகாதார ஆய்வாளர் சோமு, விஜய், ஆம்ஸ்ட்ராங், ஷகிலாபானு, திலகம், மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கண் தானம் செய்த 19 மாணவர்களை கல்லூரி சேர்மன் சதாசிவம் பாராட்டினார்.