கடத்தூர் அருகே மாரடைப்பால் இளைஞர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
கடத்தூர் அருகே மாரடைப்பால் இளைஞர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அடுத்த குருபரஹள்ளியை சேர்ந்த லெனின் என்கின்ற சசிகுமார் (35) இவர் ஓசூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு சசிகுமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அருகில் உள்ள ராமியனஹள்ளியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சசிகுமார் இறந்துவிட்டதாகவும் இறந்த சசிகுமாருக்கு அருள்மொழி என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இளைஞர் உயிரிழப்பு அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.
இதுகுறித்து குறித்து மொரப்பூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர்.