இளைஞர் தற்கொலை: பிரேதப்பரிசோதனை தாமதத்தால் உறவினர்கள் சாலை மறியல்

அரூரில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில், பிரேத பரிசோதனைக்கு தாமதம் ஏற்பட்டதால், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2021-07-26 13:15 GMT

அரூரில், இளைஞர் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்.

தர்மபுரி மாவட்டம் அரூர் ஆத்தோர வீதியைச் சேர்ந்த சேரன் மகன் ரீகன் என்பவர் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், ரீகன் உடலை பிரேத பரிசோதனைக்காக இரவு 10.30 மணிக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காலையில் இருந்து பிற்பகல்  வரை, உடலை பிரேத பரிசோதனை செய்து கொடுப்பதில் காலதாமதம் செய்வதாகவும், பலமுறை தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி உறவினர்கள், அரூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து மொரப்பூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபர்களிடம் பேசி, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதால், சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலின் காரணமாக மொரப்பூர் தர்மபுரி நெடுஞ்சாலையில், சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News