சேறும் சகதியான சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டம்
அரூர் அருகே புது கொக்கராப்பட்டி பகுதியில் சேறும் சகதியான சாலையில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்
தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த புது கொக்கராப்பட்டி பகுதியில், தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக வீதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் செல்வதா் ஆங்காங்கே சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் மாணவ மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
சாலை வசதியை ஏற்படுத்தி சாக்கடை கால்வாய் அமைத்திருந்தால் இதுபோன்று நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும், மேலும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்திய பின்பு இரண்டு ஆண்டுகள் மட்டுமே குடிநீர் தங்கள் பகுதிக்கு வந்த நிலையில் தற்போது வரை தண்ணீரை விலைக்கு வாங்கி உபயோகப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர்.
பெரும்பாலான மக்கள் மண் சுவற்றில் வீடு கட்டி வாழ்ந்து வரும் நிலையில் மழை காலம் என்பதால் மண் சுவற்றில் தண்ணீர் ஊறி ஒரு பகுதி இடிந்து விழுகின்றன. எனவே இக் கிராமத்தில் சாலை, குடிநீர், வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி குடியிருப்புகளின் முன்பு சேறும் சகதியுமான இடத்தில் பெண்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.