பழங்குடியின மாணவியை பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் மீது போக்சோவில் வழக்கு
அரூர் அருகே பழங்குடி இன மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த கல்லூரி மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.;
தர்மபுரி மாவட்டம், அரூரை சேர்ந்த, 16 வயது சிறுமி, அரசு பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வந்தார். அவரது வீட்டிற்கு உறவினரான கல்லூரி மாணவர் சூர்யா, 20, என்பவர் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால், சிறுமி ஆறு மாத கர்ப்பமானார்.
தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமி கேட்டபோது உனக்கு, 18 வயது முடியவில்லை. இருவருக்கும் படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என, சூர்யா கூறியுள்ளார். கர்ப்பமாக இருப்பது வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும் என்று கருதிய சிறுமி, கடந்த 18ந்தேதி காலை, 9மணிக்கு வீட்டில் இருந்த பூச்சிக் கொல்லி மருந்தை குடித்துள்ளார். அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்த புகாரின்படி, அரூர் அனைத்து மகளிர் போலீசார், சூர்யா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.