பேருந்து படியில் தொங்கியபடி மாணவர்கள் ஆபத்தான பயணம்
அரூரில் பேருந்து படிக்கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்;
அரூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிகளுக்கு, கீரைப்பட்டி, எல்லப்புடையாம்பட்டி, கெளாப் பாறை, வள்ளிமதுரை, செல்லம் பட்டி, பொய்யப்பட்டி, தீர்த்தமலை, பேதாதம்பட்டி உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மாணவ,மாணவியர் தினமும் அரசு பேருந்துகளில் வந்து செல்கின்றனர்.
காலை மற்றும் மாலையில் பஸ்சில் மாணவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். ஓட்டுனர், நடத்துனர் பலமுறை மாணவர்களை படியில் தொங்கியபடி பயணம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியும், மாணவர்கள் கண்டு கொள்வதில்லை.
ஆபத்து விளைவிக்கும் நோக்கில் மாணவர்கள் பயணம் செய்வதை தடுப்பதுடன், மாணவர்கள் அதிகளவில் பயணம் சித்தேரி, பெரியப்பட்டி உள்ளிட்ட செய்யும் வழித்தடங்களில் கூடுதல் இடங்களுக்கு செல்லும் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்