வங்கி கணக்கில் ஆதார் எண்களை சேர்க்க சிறப்பு முகாம் நடத்த பொதுமக்கள் கோரிக்கை

வங்கிக் கணக்கில் ஆதார் எண்ணை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்களை நடத்த அரூர் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்

Update: 2021-07-18 11:15 GMT

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர், அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளை முன்பு வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க வேண்டி தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர். இதனால் தொழிலாளர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். எனவே மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில் இதற்கான சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News