அரூர், பாப்பிரெட்டிப்பட்டியில் வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி

அரூர், பாப்பிரெட்டிப்பட்டி யூரியா, டி.ஏ.பி உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாடு காணமாக விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2021-10-22 05:30 GMT

யூரியா (பைல் படம்)

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் யூரியா, டி.ஏ.பி உள்ளிட்ட வேளாண் இடு பொருட்கள் தட்டுப்பாடு இருப்பதால் விவசாயிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தருமபுரி மாவட்டம், அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் அதிக அளவில் நெல் நடவு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நெல் நடவு பணிகளுக்கு டி.ஏ.பி. மிக அவசியமானதாகும்.

அதேபோல், மரவள்ளிக் கிழங்கு, மஞ்சள், தீவன பயிர்கள், சோளம் உள்ளிட்ட அனைத்து பயிர்களின் வளர்சிக்கும் யூரியா தேவைப்படுகிறது. கடந்த 20 தினங்களுக்கு மேலாக அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் யூரியா, டி.ஏ.பி. பொட்டாஷ் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்கள் தட்டுப்பாடு இருப்பதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் யூரியா, டி.ஏ.பி. உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் தட்டுப்பாடுகளை நீக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.

Tags:    

Similar News