அரூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை: 10 லிட்டர் பறிமுதல்; ஒருவர் கைது
அரூர் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், அரூர் வனச்சரக எல்லைக்கு உட்பட்ட சித்தேரி மலை கிராம பஞ்சாயத்து கல்நாடு, மன்னூர் பகுதியில் வன அலுவலர் கிருஷ்ணன் தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மண்ணுர் காட்டுப் பகுதிக்கு அருகாமையில் அதே பகுதியை சேர்ந்த முருகன்(30) என்பவர் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனைக்கு வைத்திருந்த 10 லிட்டர் கள்ளச் சாராயத்தை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து மாவட்ட வன அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர் உத்தரவின்பேரில் அரூர் மது விளக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து முருகனை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.