தர்மபுரி அருகே காரில் எடுத்து வந்த ரூ.33 லட்சம் பறக்கும் படையினர் பறிமுதல்

தர்மபுரி அருகே காரில் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.33 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

Update: 2022-02-02 08:30 GMT

அரூரில் உள்ள சார்நிலை கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்த ரூ.௩௩ லட்சம்.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர்–மொரப்பூர் சாலையில், சேக்காண்டஹள்ளி பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை 5 மணியளவில் உதவி வேளாண்மை அலுவலர் துரை தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூரில் இருந்து அரூர் நோக்கி வந்த ஹோண்டா சிட்டி காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணமின்றி எடுத்து வரப்பட்ட மொரப்பூர் அருகே உள்ள கோட்ரப்பட்டியை சேர்ந்த சுதாகர், வயது 41, என்பவரிடம் இருந்து ரூபாய்.33 லட்சம் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து அந்த பணத்தை அரூரில் உள்ள சார்நிலை கருவூலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். சுதாகர் பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

Tags:    

Similar News