கொரோனா எதிரொலி: தீர்த்தமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை

கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு காரணமாக தீர்த்தமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை;

Update: 2021-04-21 04:15 GMT

அரூர் அடுத்த தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. அங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களிலிருந்து பக்தர்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில்,கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில்களில் விழாக்கள் நடைபெறுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால், தற்போது  தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கோயிலில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு, சாமிக்கு தினமும் அனைத்து விதமான பூஜைகளும் நடக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News