அரூர் சிறைச்சாலையில் சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆய்வு

அரூர் சிறைச்சாலை வார்டன் மது போதையில் இருந்ததாக புகார் எழுந்த நிலையில் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஆய்வு;

Update: 2023-11-05 14:54 GMT

சேலம் மத்தியில் சிறைச்சாலையின் கட்டுப் பாட்டில் உள்ள அரூர் கிளை சிறைச்சாலை செயல்பட்டு வருகிறது. இதில் காப்பாளர், காவலர்கள், சமையலர் 13 பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று பணியில் ஈடுபட்ட தலைமை வார்டன் அசோக்குமார் மது போதையில் இருந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோதனை செய்தனர். அதில் அவர் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து சிறைத்துறை டிஜிபி-க்கு இது குறித்த விரிவான அறிக்கையை சமர்ப்பிக் கப்பட்டுள்ளது. இதனை யடுத்து சிறைத்துறை டிஜிபி அம்ரீஷ் புஜாரி உத்தரவின் பேரில்சேலம் மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் மற்றும் கட்டுப்பாட்டு அலுவலர் ஜி வினோத் மது போதையில் பணி செய்த தலைமை வார்டன் அசோக்குமாரை பணியிடை நீக்கம் செய்தார்.

இதனை தொடர்ந்து அரூர் சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்ட கண்காணிப்பாளர் சிறைவா சிகளுக்கு வழங்கப்படும் உணவுகள் குறித்தும் பதிவேடு குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ஆய்வின் போது அரூர் கிளை சிறைச்சாலை கண்காணிப்பாளர் அருண் உடன் இருந்தார்.

Tags:    

Similar News