மின்சார வயர் திருடிய இருவரை போலீஸார் கைது செய்து விசாரணை

மின்மோட்டாருக்கு செல்லும், 15 மீட்டர் நீளமுள்ள ஒயரை தி்ருடியபோது இருவரையும் பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்;

Update: 2022-03-26 05:45 GMT

கம்பைநல்லுார் அடுத்த கரு வேலம்பட்டியை சேர்ந்தவர் மாதன்(58.). இவருக்கு சொந்தமாக தென்பெண்ணையாற்றின் கரையோரத்தில் விவசாய நிலம் உள்ளது. நேற்று காலை,  மாதனின் தென்னந்தோப்பில் இருந்த மின்மோட்டாருக்கு செல்லும், 15 மீட்டர் நீளமுள்ள ஒயரை பைக்கில் வந்த இரு வாலிபர்கள் திருடிக் கொண்டிருந்தனர். அவர்களை மாதன் மற்றும் அக்கம் பக்கத்தினர் பிடித்து கம்பை நல்லுார் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூர் கீழ்வீதியை சேர்ந்த தினேஷ், 25 வினோத்குமார், 31, என்பது தெரிந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News