அரூர் போலீஸ் சப் டிவிஷனில் 531 பேர் மீது போலீசார் வழக்கு

அரூர் போலீஸ் சப் டிவிஷனில் விதிகளை மீறியதாக 531 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.;

Update: 2022-01-18 12:15 GMT
அரூர் போலீஸ் சப் டிவிஷனில் 531 பேர் மீது போலீசார் வழக்கு

பைல் படம்.

  • whatsapp icon

தர்மபுரி மாவட்டம், அரூர் சப்–டிவிஷனுக்கு உட்பட்ட, மொரப்பூர், அரூர், கோபிநாதம்பட்டி, கம்பைநல்லுார், கோட்டப்பட்டி உள்ளிட்ட ஸ்டேஷன் மற்றும் போக்குவரத்து போலீசார் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மொபைல் போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதாக 11 பேர், ஹெல்மெட் அணியாமல் சென்ற  247 பேர், சீட்பெல்ட் அணியாத 91 பேர், முகக் கவசம் அணியாத 129 பேர், குடிபோதையில் வாகனம் ஓட்டிய ஒருவர், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் சென்றதாக 37 பேர், அதிவேகம், ஓட்டுனர் உரிமம் இல்லாதது உள்பட மொத்தம் 531 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags:    

Similar News