அரூரில் போலீசார் உதவியுட்ன தேசிய நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பு அகற்றம்
அரூரில் 100க்கும் மேற்பட்ட போலீசார் உதவியுடன் தேசிய நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன.
தருமபுரி மாவட்டம், அரூர் வழியாக செல்லும் சேலம்-வாணியாம்பாடி தேசிய நெடுஞ்சாலையை அ.பள்ளிப்பட்டி முதல் அனுமன்தீர்த்தம் வரையிலும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் நடைபெறுகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சாலை விரிவாக்கப் பணிகளுக்கு இடையூறாக பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்தன. தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கடந்த 2019ல் இருந்து பல்வேறு பொது அறிவிப்பு வெளியிடப்பட்டன.
ஆனால் சாலையோரம் இருந்தவர்கள் தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வரவில்லை. இதையடுத்து, 100}க்கும் மேற்பட்ட போலீசாரின் பாதுகாப்புடன் அரூர் அண்ணா நகரில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்கலைன் எந்திரம் மூலம் அகற்றினர்.