ஆப்ரேஷன் 2.O தொடரும் கஞ்சா வேட்டை: அரூர் அருகே 2 கிலோ கஞ்சா பதுக்கிய இருவர் கைது

ஆப்ரேஷன் 2.O தொடரும் கஞ்சா வேட்டை -அரூர் அருகே 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Update: 2022-03-31 05:30 GMT

அரூர் அருகே 2 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ஆப்ரேஷன் 2.O மூலம் தமிழகத்தில் ஒரு மாதம் அதிரடியாக கஞ்சா வேட்டையில் காவலர்கள் ஈடுபட வேண்டுமென டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்டம் முழுவதும் காவல் துறை‌யின‌ர்  தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அரூர் உட்கோட்ட பகுதியில் காவல் துறையினர் தீவர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டனர். அப்பேது கூடலூர் அடுத்த பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில், சுற்றி திரிந்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னதுரை, பாவக்கல் அடுத்த வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர்.

அப்போது கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த ரூ.20,000 மதிப்புள்ள 2.200 கிலோ கிராம் கஞ்சாவை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் அரூர் சிறைச்சாலையில் அடைத்தனர்.

இதேப்போல் பாப்பிரெட்டிபட்டி அடுத்த கோம்பூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த கோபால் என்பவரை காவல் துறையினர் கைது செய்து, 100 கஞ்சாவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதால், இதற்கு அடிமையான இளைஞர்கள் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்களின் இந்த அதிரடி உத்தரவால் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வோரை காவலர்கள் கண்டுபிடித்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News