பாப்பிரெட்டிப்பட்டியில் மார்க்கிஸ்ட் கட்சியின் வட்ட கிளை மாநாடு

பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மார்க்கிஸ்ட் கட்சி வட்ட கிளை மாநாட்டில் மகளிர் கல்லூரி தொடங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

Update: 2021-10-21 04:45 GMT

பாப்பிரெட்டிப்பட்டி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட கிளை மாநாடு

சித்தேரி ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும் மா.கம்யூ கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட கிளை மாநாடு பி.பள்ளிபட்டி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வட்டகுழு உறுப்பினர்கள் தீர்த்தகிரி கண்ணகி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டியில் மகளிர் கல்லூரி தொடங்க வேண்டும். சித்தேரி ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும். அனைத்து மலைகிரமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தவேண்டும். மஞ்சளுக்கு குவிண்டாலுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், மரவள்ளி கிழங்கு 70 கிலோவுக்கு 700 ரூபாய் வழங்கவேண்டும். சித்தேரியில் கூட்டுறவு துறை மூலம் பெட்ரோல் பங்க் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் வட்ட செயலாளர் வஞ்சி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார்கள். நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, செல்வராஜ், மாரிமுத்து, சொக்கலிங்கம், சேகர், மனோகரன், நாகராஜ், சோலை அர்ச்சுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News