உள்ளாட்சி இடைத்தேர்தல்: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் வாக்குச்சாவடிகளை தேர்தல் பார்வையாளர் இன்று ஆய்வு செய்தார்.

Update: 2021-09-23 15:30 GMT

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உள்ள கொக்கராபட்டி தொடக்க பள்ளியில் சிறப்பு பார்வையாளர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் காலியாக உள்ள மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த மாதம் 9ம் தேதி தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் பார்வையாளர் தமிழக சிறப்பு அதிகாரி ஹரிஹரன், பாப்பிரெட்டிப்பட்டி யூனியன் அலுவலகத்தில் வாக்கு எண்ணும் மையம், வாக்கு பெட்டி பாதுகாப்பு அறையினையும், அரூர், ஒன்றியம் கொக்கராபட்டி,மூக்காரெட்டிபட்டியில் வாக்கு பதிவு நடைபெறும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் தேர்தல் நடத்தும் அலுவலர் பாபு, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முரளிகண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனபால், அருள் மொழிதேவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News