உள்ளாட்சி இடைத்தேர்தல்: சித்தேரி மலை கிராமத்தில் திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

சித்தேரி மலை கிராமத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Update: 2021-09-24 17:15 GMT

சித்தேரி மலைகிராமத்தில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தருமபுரி மாவட்ட ஊராட்சி குழு 18-வது வார்டு உறுப்பினருக்கு, பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் லதா தாமரைச்செல்வன் சித்தேரி மலை கிராமத்தில் முதல் நாள் வாக்கு சேகரிக்கும் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

சித்தேரி மலை கிராமத்தில் உள்ள தோல்தூக்கி, சூரியக்கடை, சூளுக் குறிச்சி, பேரேரிபுதூர், சித்தேரி உள்ளிட்ட மலை கிராமங்களில் மக்களை சந்தித்து திமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை கூறி வாக்கு சேகரித்தார்.

மேலும் மலைகிராம மக்கள் விவசாய நிலங்களில் பணியாற்றும் இடங்களுக்குச் சென்று தனக்கு வாக்களிக்குமாறு பெண்களிடம் வாக்கு சேகரித்தார்.தொடர்ந்து மலை கிராம மக்கள் திமுக வேட்பாளர் லதாவுக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த வாக்கு சேகரிக்கும் பணியில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன், திமுக மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.

Tags:    

Similar News