அரூர் அருகே வாரச் சந்தையில் கால்நடை அலங்கார பொருட்கள் விற்பனை அதிகரிப்பு

அரூர் அருகே வாரச் சந்தையில் பொஙகலையொட்டி கால்நடைகளுக்கா வண்ண வண்ண கயிறு, மணிகள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது.

Update: 2022-01-12 05:30 GMT

அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற வார சந்தை.

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு வார சந்தையில் கால்நடைகளுக்கான பொருட்கள் விற்பனை செய்யப்படும்.

இதில் பசு மாடுகளை அலங்கரிக்க தேவையான கயிறு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால், வார சந்தைகளுக்கு விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வருகை குறைந்தது.

தற்போது பொங்கல் நெருங்கும் நிலையில்  இன்றைய வாரச்சந்தையில் கால்நடைகள் வாங்க, விற்க விவசாயிகள் வருகை அதிகரித்துள்ளது. 

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில் பொங்கலுக்கு மாடுகளை அலங்கரிக்க கண்களை கவரும்  வகையில், புதிய வகைகளில் வண்ண வண்ண நூல் கயிறுகள், கொம்பு கயிறுகள், திருஷ்டி கயிறு, சங்கு,  குஞ்சங்கள், மூக்கனாக்கயிறு, கழுத்தில் அணியும் பலவகை மணிகள், சலங்கைகள், குப்பி, பட்டை சங்கலி, ஜங்கு பட்டை, வண்ணப்பூச்சிகள், கள்ள பூட்டு, வாயபட்டி, சாட்டை  ஆகிய அலங்கார பொருட்களை வார சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இன்னும் பொங்கலுக்கு  இரண்டே நாட்கள் இருப்பதால், அலங்கார பொருட்களை விவசாயிகள் வாங்கிச் சென்றனர்.  இதனால் அலங்கார பொருட்களின் விலை உயர்ந்தும் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News