'வெளியவா வர்றீங்க..?' : அரூரில் ஊர் சுற்றியவர்கள் வாகனம் பறிமுதல்

தருமபுரியில் முழுஊரடங்கை மீறி இரு சக்கர வாகனங்களில் சுற்றியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

Update: 2021-05-16 10:33 GMT

தர்மபுரி மாவட்டம், அரூரில் ஊரடங்கு விதிகளை மீறியவர்கள் வாகனங்களை பறிமுதல் செய்த போலீசார். 

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் முழுஊரடங்கை மீறி வெளியில் இரு சக்கர வாகனங்களில் சுற்றியவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக மட்டும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் திறந்து வைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. மற்ற நேரங்களில் வெளியில் நடமாடுவதற்கு தடை உள்ளது. அதே போன்று ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில், அரூரில் முழு ஊரடங்கு தினமான இன்று வாகனங்களில் காரணமின்றி வெளியில் சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டும், அவர்களின் வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டு வருகிறது. எனவே ஊரடங்கின்போது வெளியில் சுற்றுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டனர்.

Tags:    

Similar News