அரூர்: 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம்

தருமபுரி மாவட்டம், அரூர் வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில், 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம் போனது.

Update: 2021-07-13 03:00 GMT

தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனை கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளிக்கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது.  இங்கு விவசாயிகள் தங்களது விளை நிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து விட்டு பணத்தை பெற்று செல்கின்றனர்.

இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர்.  விவசாயிகள் எடுத்து வந்த  3200 பருத்தி மூட்டை ரூ.65 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், வர லட்சுமி (டிசிஎச்) ரகம் ரூ.6669 முதல்  ரூ.7529 வரையில் ஏலம் போனது. 

கடந்த வார்ததை  விட, விவசாயிகள் வரத்து குறைந்து இருந்தது. ஆனால் பருத்தி வரத்து அதிகரித்தாலும், வாரத்தை விட விலையும் குறைந்து  விற்பனையானது. கடந்த வாரம் 3000 மூட்டை பருத்தி ரூ. 75 இலட்சத்திற்கு விற்பனையான நிலையில், நேற்று 3200 மூட்டை பருத்தி ரூ.65 இலட்சத்திற்கு ஏலம் போனது. 

Tags:    

Similar News